எம்ஜிஆர் பாணியை விஜய் பின்பற்றுகிறார் என்றும், எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும், திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும் என்றும், நடிகர் விஜய் நிச்சயமாக தேர்தலில் தோல்வியை சந்திப்பார் என்றும் அமைச்சர் ரகுபதி பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 2024 ஆம் ஆண்டு வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி அடைந்தார். அதேபோல், அவரால் 2026 ஆம் ஆண்டிலும் வலுவான கூட்டணி அமைக்க முடியாது என்றும், எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
"யார் எந்த கூட்டணிக்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நண்பர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை," என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும், நடிகர் விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும், கண்டிப்பாக விஜய் தோல்வியை தான் சந்திப்பார்," என்று அவர் கூறினார்.