தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கப்போவதாக வெளியான செய்தி குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கோவில்கள் வார இறுதிகளில் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில் நகைகளை உருக்கு பிஸ்கட்டுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் கோவில் நகைகளை உருக்க போவதாக வெளியான செய்தி குறித்தும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ”கோவிலில் சாமிக்கு அணிவிக்கும் நகைகளை உருக்கப்போவதாக சொல்லவில்லை. கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகளை உருக்குவதாகதான் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்தால் கோவில்களை திறக்க தயார்” எனக் கூறியுள்ளார்.