Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சுமூக தீர்வு: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (12:10 IST)
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சமூக தீர்வு கட்டப்பட்டு விட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது

ஸ்ரீரங்கம்  கோவிலில்   ஆந்திர மாநில பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பக்தருக்கும் பணியாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என தெரியவந்துள்ளது.  இதுகுறித்து பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஆகிய மூன்று தரப்பினர்களையும்  அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டு விட்டது.

தற்செயலாக நடைபெறும் சம்பவங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார். மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்த அவருக்கு அதை செய்ய முடியவில்லை. எனவே  தற்போது இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து செய்த பதிவில் “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஐயப்ப பக்தர்களை நீண்ட வரிசையில் காத்திருக்கவைத்ததை கேள்வி எழுப்பியதால் கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது’ என்று பதிவு செய்திருந்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments