Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ராடுதனம் நடந்துச்சோ...? வார்னிங் கொடுத்த செங்கோட்டையன்!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (12:02 IST)
10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் நடவடிக்கை என செங்கோட்டையன் எச்சரிக்கை. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தற்போது மதிப்பெண் பதிவு பட்டியல் மட்டுமே உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு ஆர்வம் கொடுத்து எழுதாததால் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வை ஒழுங்காக எழுதாமல் ஃபெயில் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு எப்படி மதிப்பெண் அளிப்பது என்று புரியாமல் ஆசிரியர்கள் குழம்பி போயுள்ளனர். 
 
இதனால் சில முறைகேடுகளும் நடந்து வருவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் பாராபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக எச்சரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments