தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை வசூலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.