Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் மின் தேவை - அமைச்சர் நாளை ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (10:43 IST)
மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை. 

 
தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது என்றும் கடந்த காலங்களைவிட 2500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு தேவை உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மின் தேவை அதிகரித்துள்ளதால் தான் அவ்வப்போது தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும் மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். அதோடு, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments