அமலாக்கத்துறை சமீபத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம், இவ்வழக்கை, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
அவருக்கான நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்திருந்தார்.
இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.