இந்த முறை நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து தெரிவித்ததாவது,
இந்த முறை நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார்.
நீட் எதிர்ப்பு மசோதவை ஆளுநர் அனுப்பிய பின் குடியரசு தலைவரை தமிழக குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்துள்ளார்.