நீட்டிற்கு எதிரான நம் அறப்போராட்டம் நீட் ஒழியும் வரை தொடரும் என நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் லட்சியத்துக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் அநீதியை எதிர்த்து, நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினோம்.
50 நாட்களில் - 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்கொடு பணிகளை தொடங்கினோம். நீட் ஒழிப்பிற்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் பேரலையாக திரண்டு வந்து கையெழுத்திட்டனர்.
இணையம் மற்றும் அஞ்சல் வழியில் 85 லட்சம் பேர் கையெழுத்திட்ட நிலையில், அஞ்சல் அட்டையில் பெறப்பட்ட கையெழுத்துகளை சேலம் திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாட்டு மேடையில் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினோம்.
இந்த கையெழுத்துகள் அனைத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்த மாபெரும் இயக்கத்தில் கழகத்துடன் கைகோர்த்து நின்ற தமிழ் நாட்டு மக்களுக்கும், இப்பணியை சிறப்போடு மேற்கொண்ட கழகத்தினர் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.