Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தும்பை விட்டுட்டு வாலை பிடிச்சா? கடுப்பான விஜயபாஸ்கர்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:54 IST)
நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டமாக பேசியுள்ளார். 
 
நீட் தேர்வு குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நீட் தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. 
 
நீட் என்ற வார்த்தை கடந்த 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தான் விதைக்கப்பட்டது. இப்போது அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படியே செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
 
ஆனால் மக்களையும், மாணவர்களையும் குழப்பி திசை திருப்புவதற்காக, திமுகவும், எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கின்ற செயலை செய்கின்றனர் என காட்டமாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments