சமீபத்தில் மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று,உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் வன்முறை நின்றால் மட்டுமே இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :
தமிழக அரசு சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்.
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.