குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இதுவரை 52,72,000 மிஸ்டு கால்ஸ் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டது.
அதன் ஒரு அங்கமாக, இலவச டோல் பிரீ தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு, மிஸ்டு கால் செய்யுமாறு பாஜக கோரிக்கை விடுத்தது. இதன் மூலம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இதுவரை 52,72,000 மிஸ்டு கால்ஸ் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.