தமிழகத்தில் அரசு பணிகள் மற்றும் படிப்புகளில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதிப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை தாமதமின்றி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4 சதவீதமும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 சதவீதமும், 20 நபர்களுக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் சமவாய்ப்பு வழங்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.