சிறுபான்மையினர் நலனுக்கு எந்த பிரச்சினையும் வர அதிமுக அனுமதிக்காது என ஈபிஎஸ்-ஓபிஎஸ் விடுத்துள்ள கூட்டறிக்கையை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகளுக்கு எதிரான எதையும் அதிமுக செய்யாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்த கூட்டறிக்கையை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூட்டறிக்கை மூலமாக சிறுபான்மை மக்களை அதிமுக ஏமாற்ற நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிறுபான்மையின மக்களுக்கு உதவுவதாய் இருந்தால் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம் என்றும், முதல்வர் மத்திய பாஜக அரசுக்கு பயந்து பணிந்து செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
அதிமுக எந்த திட்டம் நிறைவேற்றினாலும் அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து பேசுவதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என அதிமுக வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறதாம்!