மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மின்சார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க,ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா தனியார் மின் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை மின் நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.