மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் உள்ளானேன் என்றும் அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று தண்டையார்பேட்டையில் உள்ள மதுசூதனன் வீட்டிற்கு சென்ற முதல்வர், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.