உதயநிதி ஸ்டாலினை மேயர் பதவிக்கு போட்டியிட வைக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயளாலர் பதவியை கொடுத்த போது பல தரப்பினர் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால், விமர்சனங்களை தாண்டியும் தனது பதவியில் இருந்து செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், அடுத்து உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதியை போட்டியிட வைக்கும் திட்டத்தில் தலைமை இருக்கிறதாம். உதயநிதியும் இதற்கு தயாராகத்தான் இருக்கிறாராம்.
அப்படி அவர் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் இளைஞர் அணி தொண்டர்கள் அனைவரும் களமிறங்கி கலக்குவார்களாம். எனவே இப்போது முதலே அவர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை பெற உதயநிதி வலைந்து கொடுத்து செயல்பட்டு வருகிறாராம்.
தொண்டன், இளைஞர் அணி செயளாலர், மேயர், அமைச்சர், துணை முதல்வர், கழக தலைவர் என ஸ்டாலின் படிப்படியாக கட்சியில் வளர்ந்தார். ஆனால், உதயநிதியை படிப்படியாக கட்சியில் வளர்த்துவிட நினைக்கிறார்.
ஏற்கனவே உதயநிதியை இளைஞர் அணி செயளாலர் ஆக்கியதே கட்சிக்குள் இருக்கும் சில சீனியர்களுக்கு பிடிக்காத நிலையில், இப்போது மேயர் அடுத்து அமைச்சர் என வளர்த்துவிட நினைக்கும் ஸ்டாலின் மீது வெளியில் சொல்ல முடியாத அதிருப்திகளும் கட்சிக்குள் இருப்பதாக தெரிகிறது.