Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியிடம் கேள்வி கேப்பாரா ஸ்டாலின்? – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திட்டம்!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (11:28 IST)
சீனாவின் தாக்குதல் குறித்து இன்று மாலை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் சீனா – இந்திய ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா முன் வந்துள்ள நிலையில், இதுகுறித்த ஆலோசனைகளை அனைத்து கட்சி கூட்டம் மூலமாக பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். சீனா தாக்குதல் குறித்து காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியிடம் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில்,  காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments