10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மேலும் தேர்வு அட்டவணையையும் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூன் 1 - மொழித்தேர்வு; ஜூன் 3 - ஆங்கிலம்; ஜூன் 5 - கணிதம்; ஜூன் 6 - மாற்று மொழித்தேர்வு; ஜூன் 8 - அறிவியல்; ஜூன் 10 - சமூக அறிவியல்; ஜூன் 12 - தொழிற்பிரிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் தேர்வை நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது குறித்து விரிவாக அவர் தெரிவித்துள்ளதாவது...
மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை, இந்த நிலையில் தேர்வு தேதியை அறிவிக்க என்ன அவசரம், அவசியம்?
போக்குவரத்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அப்படி இருக்கையில் மாணவர்கல் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகு மாணவர்கள், ஆசிர்யர்கள் மற்றும் பெறோர்களை மனரீதியாக தயார் செய்த பிறகு தேதியை அறிவித்து இருக்க வேண்டும் என தெரிவித்துளார்.