Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் தவணையை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (13:54 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுக்கு அளித்து வருகிறார். ஆனால் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி ஆளும் கட்சிகள் பெரிய அளவில் விளம்பரம் தேடிக்கொள்கின்றன. 
 
குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தக்கூடாது என்று முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றியதை அடுத்து மாணவர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. கட்-அவுட் வைத்து, போஸ்டர் ஒட்டும் அளவிற்கும், ‘மனித கடவுள் எடப்பாடி பழனிசாமி என்று மாணவர்களால் போற்றப்படும் அளவிற்கும் அவருக்கு புகழ் குவிந்தது 
 
இந்த நிலையில் தற்போது இஎம்ஐ அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ’கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், பேரிடர் காலத்தில் வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டி வதைக்க நினைப்பது மனிதாபிமானம் அல்ல என்றும் கூறியுள்ளார் 
 
எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடன் தொகைக்கான வட்டியை வசூலிக்காமல் வாழ்வாதாரத்தை மீட்க முன்வர வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றி பொதுமக்களிடமிருந்து ஆதரவைப் பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments