Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதத்தில் நாற்காலியை விட்டு இறங்கப் போகும் எடப்பாடி: ஸ்டாலின் ஆருடம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (11:28 IST)
இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி என ஸ்டாலின் பேச்சு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. 
 
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமையும் போது, ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசியுள்ளார். அதோடு, இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் இன்னும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாங்கள் பாடுபடுவோம் என பேசி வருகிறார். 
 
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் ஆள்கிறது. ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், எங்கும் தப்ப முடியாது. திமுக ஆட்சி அமையும் போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments