தமிழகத்தில் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 13ல் மாநில பட்ஜெட்டும், 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் சாத்தியமுள்ள பல நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வர திட்டம் உள்ளது. பிரதமரை நேரில் சந்தித்து மெட்ரோ ரயில் குறித்து அழுத்தம் கொடுத்ததால் அனுமதி கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்.