Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எட்டாக்கனியான கல்வியை கிட்டிட செய்தவர்! – காமராஜர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

எட்டாக்கனியான கல்வியை கிட்டிட செய்தவர்! – காமராஜர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
, வியாழன், 15 ஜூலை 2021 (10:44 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சரான காமராஜரின் 119வது பிறந்தநாளில் அவரது உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவருமான கர்மவீரர் காமராசரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

பின்னர் அவர் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்!” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடுபிடிக்கும் ககன்யான் திட்டம்; இன்ஜின் சோதனை வெற்றி! – இஸ்ரோ தகவல்!