மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் மழைநீர்வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆண்டுதோறும் மழை காலங்களில் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளம் சூழ்வது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்த உடனே சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
பல பகுதிகளிலும் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்குள் கிட்டத்தட்ட மழை காலமும் நெருங்கியுள்ளது. அதனால் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். செண்ட்ரல் ஸ்டேசன் அருகேயுள்ள வால்டாக்ஸ் ரோடு தொடங்கி கொளத்தூர் வேலவன் நகர் வரை பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், மழைநீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் வரை முடிந்து இருப்பதாகவும், மீத பணிகளை இன்னும் 15 முதல் 30 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வடிகால் பணிகள் திருப்தி அளிப்பதாகவும், எப்படிபட்ட மழையையும் சமாளித்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.