தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சீர்காழியில் பெய்துள்ள கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விர அதிகமாக மழை பெய்துள்ளது.
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளதால் சுமார் ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 32 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சீர்காழி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.