Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை கடைசியாக எச்சரிக்கிறேன்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (11:42 IST)
தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தங்களை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் பொது மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் திமுகவால்தான் அதிகம் பரவுதாக அதிமுகவும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆளுங்கட்சி திணறுவதாக எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே முதல்வரும் சரி, அவருடைய அமைச்சர்களும் சரி கொரோனா வைரஸ் பரவுவதற்கும் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ என்ற செயல் தான் காரணம் என்றும் அதனால் தான் திமுகவின் 3 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார் 
 
இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்று ஆளும் கட்சியின் அமைச்சர்களையும் குறிப்பாக முதல்வரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். யாருடைய ஆலோசனையும் முதல்வர் கேட்பதில்லை என்றும் முதல்வரை கடைசியாக எச்சரிக்கிறேன் என்று கூறிய முக ஸ்டாலின், ‘ஒன்றிணைவோம் திட்டத்தின் மூலம் தான் கொரோனா பரவுவதாக முதல்வர் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுப்பியுள்ள ஆவேச கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த கேள்விக்கு பதிலளிக்க தமிழக அமைச்சர்களும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments