Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு.. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (12:38 IST)
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளிகள் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்து கடந்த அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு மருத்துவ படிப்பில் வழங்கிய இடஒதுக்கீடு செல்லும் என தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமுகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம். நாட்டுக்கே வழிகாட்டும் சமூக கடமையை தமிழக அரசு தொடர்ந்து செய்யும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments