வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது.
வங்க கடலின் தென்கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது மோக்கா புயலாக வலுவடைந்துள்ளது.
இந்த மோக்கா (Mocha) புயல் வடக்கு – வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில் வரும் 14ம் தேதி வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மோக்கா புயல் வளிமண்டல ஈரபதத்தை ஈர்த்தப்படி செல்வதால் காற்றின் ஈரபதம் குறைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.