வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலின் தென்கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ள அது இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை புயலாக வலுவடையும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கே நகர்ந்து வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவு இல்லாவிட்டாலும் வட தமிழக கரையோர மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சியால் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைவதால் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.