மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள 58,341 பேருக்கு நேரில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ள 36,775 பேருக்கு வீட்டில் சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய இரு நோய் பாதிப்புகளும் உள்ள 25,787 பேருக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3,772 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.