ரூ.30,000 மதிப்புள்ள பைக்கில் சென்றவருக்கு ரூ.3.2 லட்சம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு பெங்களூரில் தற்போது அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரில் சாலை விதிகளை 350 முறை மீறியதாக வாகன ஓட்டி ஒருவருக்கு 3.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பயணம் செய்வதோ ரூ.30,000 மதிப்புள்ள பைக் என்ற நிலையில் தனது வாகனத்தின் மதிப்பை விட 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து அவர் காவல்துறையினரிடம் வேதனை தெரிவித்தார்
ஆனால் அதே நேரத்தில் அபராதத்தை செலுத்தாவிட்டால் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று கூறியதை அடுத்து தவணை முறையில் செலுத்த வேண்டுகோள் விடுத்ததை எடுத்து போக்குவரத்து போலீசார் ஒப்புதல் அளித்து கொண்டனர். தவணை முறையில் சரியாக செலுத்தாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது