முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் அனைத்து பெற்றோர்களும் விரும்புவது தனியார் பள்ளிகளை தான் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளி மோகம் பெற்றோர் மத்தியில் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால் சமீப காலமாக அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதன் காரணமாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்க எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர 60 ஆயிரத்து மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.