Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

karur perani
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (23:09 IST)
கரூரில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில் ஜேசிஜ கரூர் டைமண்டின் என்ற அமைப்பின் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 
கரூர் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோவிலிருந்து ஜேசிஜ கரூர் டைமண்டின் என்ற அமைப்பின் சார்பில் வெங்கடேஷ் தலைவர் தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணி யானது கரூர் ஈரோடு ரோடு முனியப்பன் கோவிலிருந்து  திருக்காம்புலியூர், கோவை ரோடு, வையாபுரி நகர், பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக மீண்டும்  முனியப்பன் கோவில் பகுதியை வந்தடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் பங்கேற்று தலைக்கவசம் உயிர்க்கவசம்., "ஏதேனும் ஒரு உயிரை காப்பாற்றினால் இந்த பேரணி  வெற்றியடையும்., நமது குடும்பத்தில் மற்றும் அருகில் இருக்கும் நண்பர்களின் உயிரைப் பாதுகாக்கவும் இந்தப் பேரணியை நடத்துகிறோம் வாருங்கள் அனைவரும் கை கோர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும்  கோஷங்கள் எழுப்பியவாறு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக வந்தனர்., அப்பொழுது கிரேன் இயந்திரத்தில் இருசக்கர வாகனத்தை தொங்கவிட்டு விபத்து நடந்தால் உங்கள் வாகனத்தை இதுபோன்று தான் எடுத்து செல்வார்கள் என்று தத்துரூபமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் விஜயன் ஜேசிஜ கரூர் டைமண்டிகன் செயலாளர், பாலகணேசன் ஜேசிஜ கரூர் டைமண்டிகன் பொருளாளர் மற்றும் காவல்துறையினர், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணையைக் கொன்றதற்காக....7 முறை இளைஞரை தீண்டிய பாம்பு....