Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எம்பி வசந்தகுமார் கைது? 3 பிரிவில் வழக்குபதிவு! ஜாமீன் கிடைக்குமா....

எம்பி வசந்தகுமார் கைது? 3 பிரிவில் வழக்குபதிவு! ஜாமீன் கிடைக்குமா....
, திங்கள், 21 அக்டோபர் 2019 (17:52 IST)
எம்பி வசந்தகுமார் மீது நாங்குநேரி போலீஸார் தேர்தல் அதிகாரியின் புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
நாங்குநேரி தொகுதியில் இன்று வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்து சென்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
ஆனால் வசந்தகுமாரோ இதற்கு, நான் பரப்புரை செய்தால் என்னை கைது செய்யலாம், ஆனால், நான் நாங்க்நேரி வழியாக பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டிற்கு தான் சென்றேன். நாங்குநேரி வழியாக செல்ல கூடாது என நாடாளுமன்ற உறுப்பினரான என்னை ஒரு கைதி போல அழைத்து வந்தனர் என கூறியிருந்தார். 
 
இதனை தொடர்ந்து தற்போது தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல், வசந்தகுமார் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பணப்பட்டுவாடா, தேவையின்றி கூட்டம் கூட்டுதல், தொகுதிக்கு சம்மந்தம் இல்லாமல் நுழைதல் என 171 ஹெச், 130 மற்றும் 143 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தற்போதைய தகவலின் படி, தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !