Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டு திறந்து ஓராண்டு நிறைவு! – கூட்டமாக டான்ஸ் ஆடிய முன்கள பணியாளர்கள்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:19 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக சுமார் ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதலாகவே பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள், சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.

அவ்வாறாக மும்பையில் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. கொரேகானில் அமைந்துள்ள அந்த வார்டில் இதுவரை 21 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆண்டு நிறைவை அங்குள்ள முன்கள பணியாளர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments