Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்த மர்ம நபர் கைது.. தீவிர விசாரணை..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:42 IST)
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் அந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பிப்ரவரி 6ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை கீழே ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த தீ கொழுந்து விட்டு எரிய எரிய அவர் மேலும் மேலும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக கபாலீஸ்வரர் கோயில் கதவுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் மயிலாப்பூர் கோவில் அருகே தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்தவரை போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

வங்கக்கடலில் தாமதமாகிறதா காற்றழுத்த தாழ்வு? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

ஹசீனா ஆட்சியில் 3,500 பேரை காணவில்லை: வங்கதேச விசாரணை ஆணையத்தின் அதிர்ச்சி அறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments