Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (14:07 IST)
நாம் தமிழர் என்ற கட்சியின் நிர்வாகிகளின் வீட்டில் கடந்த 2 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜாராகினர்.
 

தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாக கிடைத்த தகவலின் பேரில்,  கடந்த 2 ஆம் தேதி , நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு மடிக்கணிணி, 7 செல்போன்,  8 சிம்கார்டுகள்,  4 பென்டிரைவ்கள் , விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் சட்டவிரோதமான புத்தகங்கள் உள்ளிட்டவரை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர்  கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் சட்டை துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். அவர்களின் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments