சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த பண விவகாரம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தவர் யார் என்பதை நயினார் நாகேந்திரன் கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர்களிடம் நான்கு கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்வதாகவும் அவர்கள் நெல்லைக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விஷயத்தை தேர்தல் அதிகாரிக்கு யார் சொன்னது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் விசாரித்த நிலையில் தற்போது ஒருவரை சந்தேகப்படுவதாகவும் அந்த நபர்தான் தேர்தல் அதிகாரிகளுடன் போட்டுக் கொடுத்தது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
நெல்லையில் தனக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்தல் முடிந்ததும் அவரை ஒரு கை பார்க்கிறேன் என நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களிடம் ஆவேசமாக கூறியதாக கூறப்படுகிறது.