இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் எத்தனாலை உபயோகித்து, பெட்ரோலியப் பொருட்களினை இறக்குமதியை தடை செய்ய வேண்டுமென்றும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் கூறினார்.
கரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் வர இருக்கும், திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் கள் இயக்கம் வேட்பாளர்களை களம் இறக்கும், வெற்றி, தோல்வி இதனுடைய நோக்கம் அல்ல, மக்களுக்கு நல்ல ஒரு புதிய பாதையை உருவாக்க தான், அதனை தொடர்ந்து வரும் 2019 ம் ஆண்டின் தேர்தல்களிலும், கள் இயக்கம் வேட்பாளர்களை களம் இறக்கும் என்றார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, திருச்சி டூ கோவை வரை 12 வழி சாலைகள் அமைக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். அந்த வழிச்சாலை தேவையில்லாதது என்றும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்காகவே இதனை கள் இயக்கம் கருதுகின்றது என்றதோடு, ஆளுநர் ஆங்காங்கே தமிழக அளவில் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார். ஆய்வு செய்வது அவரது உரிமை, ஆனால் அந்த ஆய்வின் தன்மை குடியரசுத்தலைவரிடம் தான் ஒப்படைக்க வேண்டுமே, தவிர, நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்றார்.
மேலும் பெட்ரோல் இறக்குமதி செய்தால் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு சரிபாதி, கமிஷன் கிடைக்கின்றது. பெட்ரோலியத்தினை இறக்குமதி செய்வது தேவைதானா ? என்பது குறித்தும், மெத்தனாலை பயன்படுத்துவது குறித்தும் இந்த அரசு யோசிப்பது ஏன் என்றால் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைப்பது நின்று விடும் என்பதற்காக தான், ஆகவே, இந்தியாவில் உள்ள 500 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளில் இருந்து மெத்தனாலை தனியாக பிரித்து, அந்த மெத்தனாலை பெட்ரோலியப்பொருட்களுக்கு பயன்படுத்தினால் நம் நாடு வல்லரசாகி விடும் என்பதோடு, ஏன் கையை நீட்ட வேண்டும் வெளி நாட்டில் என்றார்.
பேட்டி : செ.நல்லசாமி – செயலாளர் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு – ஒருங்கிணைப்பாளர் – தமிழ்நாடு கள் இயக்கம்