பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வுத்தாளை வெளியிட்ட பெண்ணுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1600 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கு நேற்று முன்தினம் தேர்வுகள் தொடங்கின. முன்னதாகவே இந்த பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தேர்வின் ஆங்கில பாட வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கலை சேர்ந்த பெண் ஒருவர் வினாத்தாளை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அந்த பெண் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.