Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையில் தூங்கி வழியும் நாஞ்சில் சம்பத்: தினகரன் கைதுக்கு மதுரையில் கண்டன கூட்டம் (வீடியோ இணைப்பு)

மேடையில் தூங்கி வழியும் நாஞ்சில் சம்பத்: தினகரன் கைதுக்கு மதுரையில் கண்டன கூட்டம் (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 10 மே 2017 (09:28 IST)
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட அவரது அக்கா மகன் டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.


 
 
தினகரனின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மதுரையில் கண்டன கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் மேடையிலேயே தூங்கி வழியும் வீடியோ காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
 
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு பெற்றுத்தர இடைத்தரகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கில் தினகரனுக்கு எதிராக சாட்சியங்கள் வலுபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தது. ஆனால் தினகரனின் ஆதரவாளர்கள் இது அரசியல் நோக்கத்திற்காக போடப்பட்டுள்ள வழக்குகள் என கூறிவருகின்றனர்.

 

நன்றி: Dinamalar
 
அதிமுகவை அழிக்க, தினகரனின் வளர்ச்சியை தடுக்கவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்?. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து தினகரனின் கைதை கண்டித்து மதுரையில் கண்டன கூட்டத்தை நடத்தினர்.
 
இந்த கூட்டத்தில் மதிய வேளையில் மேடையில் பேச்சாளர்கள் தினகரன் கைதை கண்டித்து பேசிக்கொண்டு இருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த நாஞ்சில் சம்பத் நன்றாக தூங்கி வழிந்தார். இது கேமராக்களின் கண்களில் பட அவ்வளவு தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments