Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

N.D.A கூட்டணி அழைப்பு: அதிமுக சார்பில் ஆலோசனை வழங்க உள்ளேன்- ஓ.ரவீந்திரநாத்

ravindranath
, புதன், 19 ஜூலை 2023 (13:42 IST)
நாளை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில்  மக்களவை தலைவரக ஓ,ரவீந்திரநாத் கலந்து கொள்ளவுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்தது. இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக்கியது செல்லும் என்று தீர்ப்பானது. இதற்கு முன்பே எடப்பாடி  பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ,.பன்னீர்ல்செல்வம் உள்ளிட்ட சிலரை  கட்சியை விட்டு  நீக்கினார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  நாளை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மக்களவை சார்பில்  தலைவரக ஓ,ரவீந்திரநாத் கலந்து கொள்ளவுள்ளார்.

இதுபற்றி ரவீந்திர நாத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று, பாஜக மெகா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக( எடப்பாடி பழனிசாமி), தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமமுக, ஐஜேகே, உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பை கடிக்க வைத்து தொழிலதிபர் கொலை: ரகசிய தொடர்பில் இருந்த பெண் காரணமா?