எண்ணூர் முகத்துவாரம் - காசிமேடு வரை 20 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக ந்ஃஅடைபெற்று வருவதாகவும் இதுவரை 10 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணூர் பகுதிகளில் தொழிற்சாலைகளில் உள்ள கழிவு எண்ணெய், எண்ணூர் குடியிருப்பு பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையில் கலந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலில் மிதந்த எண்ணெய் கழிவுகளை 3 ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயன பவுடர்கள் தூவி 10 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை கடலோர காவல் படை மேற்கொள்ள உள்ளது
கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.