இரட்டை குழந்தை விவாகரத்தில் விசாரணை குழுவிடம் தேவையான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் சமர்பித்துள்ளதாக தகவல்.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களில் இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த குழந்தைகள் இந்திய சட்ட விதிமுறையை பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளது.
இந்த குழுவினர் நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் பிறந்த மருத்துவமனையில் விசாரணை செய்யும் என்றும் அதன் பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை செய்யும் என்றும் முன்னர் கூறப்பட்டது. இதன் பின்னர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த மருத்துவமனை குறித்த விவரம் கண்டறியப்பட்டுள்ளதாம்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் இரட்டை குழந்தை விவாகரத்தில் விசாரணை குழுவிடம் தேவையான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமர்பித்த ஆதாரத்தோடு தம்பதியினர் குறிப்பிட்டுள்ளதாவது,
6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் தெரிவித்துள்ளனராம்.
Edited By: Sugapriya Prakash