பாஜக முக்கிய நபர் நயினார் ராஜேந்திரனுக்கு கட்சியில் தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது அவர் பின்வருமாறு பேசினார்.
பாஜக நாளை ஆட்சிக்கு வரும் என்று தமிழகத்தில் ஒரு சூழல் உள்ளது. அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். பாஜக எப்போதும் கிங் தான்.
பதவி, திறமை, உழைப்பை வைத்துதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளுமை உருவாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள், அவர்கள் ஆளுமை மிக்க தலைவர்களாக நாட்டை ஆள்வார்கள். தேர்தலை பற்றி யாரும் சிந்திக்கவில்லை, தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியும் என்றார்.
இதற்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென தொண்டர்கள் விரும்புகிறார்கள். தேமுதிக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள வேண்டுமென தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புகிறார்கள் என கூறியிருந்தார்.
ஆக மொத்தம் இப்போது தேமுதிக கிங்-கா, இல்லை பாஜக கிங்-கா, என தேர்தல் வரும் நேரத்தில் தெரியும்.