ரூபாய் 2000 கோடி போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநில காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்பவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் எனக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றும் இயக்குனர் அமீர் மூலமாகவே ஜாபர் சாதிக் உடன் அறிமுகமாகி இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது தான் அவரை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்
அமீர், ஜாபர் சாதிக் என இரு அனைவரும் எடுத்துக்கொண்ட படத்தை நாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல் பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் நான் இருப்பதால்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்