ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் கள்ளசாரய வியாபாரம் முளைவிட தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான பலர் மது கிடைக்காமல் அல்லாட தொடங்கியுள்ளனர். இதை வாய்ப்பாக கொண்டு சில கும்பல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீஸார் ட்ரோன்கள் மூலம் கள்ளசாராயம் காய்ச்சப்படும் பகுதிகளை உளவு பார்த்து சட்ட விரோத கும்பல்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 25 நாட்களில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 27,500 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் 21,000 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.