Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நெல்லை கோவில் திருவிழா: அன்னதானத்தில் பரிமாறப்பட்ட 8 ஆயிரம் பரோட்டா!

parotta
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:53 IST)
நெல்லை கோவில் திருவிழா: அன்னதானத்தில் பரிமாறப்பட்ட 8 ஆயிரம் பரோட்டா!
பொதுவாக கோவில் திருவிழாவில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பாடு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என்று தான் வழங்கப்படும். ஆனால் நெல்லையில் உள்ள கோவில் திருவிழாவில் 8000 பரோட்டாக்கள் அன்னதானத்தில் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நெல்லை மாவட்டத்திலுள்ள ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் தற்போது ஆடி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
இந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் அமைப்பு ஒன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தது அன்னதானம் என்றால் சாப்பாடு கூட்டு பொரியல் என்ற உணவுக்கு பதிலாக இளைஞர்கள் மாற்றி யோசித்து அன்னதானமாக பரோட்டாவை வழங்கினார்கள்
 
200 கிலோ மைதாவை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 8000 பரோட்டாவை அந்த பகுதி இளைஞர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்லாந்து கோத்தபய தற்காலிக தஞ்சம்: அடுத்தது எந்த நாடு?