Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வந்த புயலுக்கே வழி இல்லையாம்: வராத புயலுக்கு 309.375 கோடியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

வந்த புயலுக்கே வழி இல்லையாம்: வராத புயலுக்கு 309.375 கோடியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:51 IST)
ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.309.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
 
இன்று காலை நிலவரத்தின்படி வங்க கடலில் ஃபானி புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கிமீ தொலைவில் இருந்தது. ஏற்கனவே கணித்தது போல இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த புயல், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம் வரை வந்து பிறகு திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில், வடதமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசும். மாலை நேரங்களில் 50 கிமீ வேகத்திலும், சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
 
குறிப்பாக புயல் தாக்கத்தால், இன்று முதல் சென்னை உட்பட வட தமிழகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மத்திய உள்துறை அமைச்சகம் ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 
 
தமிழகம்: ரூ.309.375 கோடி
ஆந்திரா: ரூ.200.25 கோடி
ஒடிசா: ரூ.340.875 கோடி
மேற்கு வங்கம்: ரூ.235.50 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளது.
 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வந்த புயலுக்கே வழி இல்லையாம்: வராத புயலுக்கு 309.375 கோடியா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 
webdunia

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க? செய்தியாளர்களிடம் எகிறிய ஓபிஎஸ்