Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவசரப் பட்டுட்டியே குமாரு – தினமலர் செய்தியால் குழப்பம் !

Advertiesment
சந்திராயன் 2
, திங்கள், 15 ஜூலை 2019 (12:45 IST)
சந்திராயன் 2 செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல்கல் என்று கூறப்படும் சந்திரயான் 2, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள உலகின் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திராயன் 2 செயற்கைக்கோள் இந்திய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நிலவில் மெதுவாக தரையிறங்கும் செயற்கைக்கோளை உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையும் இந்த செயற்கைகோளால் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த நேற்று காலை 6.51 மணிக்கு கவுன்டவுன் தொடங்கியது. சந்திரயான் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.  ஆனால் தினமலர் நாளிதழோ சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதுவும் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக.
 
சந்திராயன் 2

இதைக் கண்டு அதிருப்தியடைந்த இணையவாசிகள் பலர் தினமலர் நாளிதழைக் கேலி செய்துவருகின்றனர். இதனால் ‘அவசரப்பட்டுட்டியே குமாரு’ எனப் பலரும் கேலி செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியக் கட்சிக்காரரும்… சூர்யாவும் – தமிழிசைக் கிண்டல் !